கிரிக்கெட்

தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி + "||" + Tendulkar, Laura will be participating Over 20 cricket match

தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
மும்பை,

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும். ‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் - பிரெட்லீ சொல்கிறார்
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் என்று பிரெட்லீ தெரிவித்துள்ளார்.
2. தெண்டுல்கருக்கு 47-வது பிறந்தநாள்: விராட்கோலி உள்பட விளையாட்டு உலகினர் வாழ்த்து
தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடிய தெண்டுல்கருக்கு, விராட்கோலி உள்பட விளையாட்டு உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
3. தெண்டுல்கரை சீண்டினேன்; மன்னிப்பு கேட்டேன் - சக்லைன் முஷ்டாக் நெகிழ்ச்சி
தெண்டுல்கரை சீண்டினேன், அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சக்லைன் முஷ்டாக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
4. பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் மாஸ்க் அணியுங்கள் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்
'பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் கட்டாயமாக 'மாஸ்க்' அணிய வேண்டும் என சச்சின் தெண்டுல்கர் கோலி உள்ளிட்டோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
5. தெண்டுல்கரை விட லாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் - மெக்ராத் பேட்டி
தெண்டுல்கரைவிட லாராவுக்கு பந்துவீசுவதே கடினமாக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.