கிரிக்கெட்

'அவர் இப்போது என்ன செய்தார்? -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில் + "||" + What has he done now? Sourav Ganguly's response to question on Ravi Shastri goes viral

'அவர் இப்போது என்ன செய்தார்? -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்

'அவர் இப்போது என்ன செய்தார்? -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி நிருபர்கள் சந்திப்பின்போது ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக  போட்டியின்றி தேர்வாகி உள்ளார். வரும் 23ம் தேதி பதவி ஏற்க உள்ள கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கங்குலியுடன் ஜெய் ஷா, அருண் துமல், ஜெயேஷ் ஜார்ஜ், மஹிம் வர்மா ஆகியோரும் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்க உள்ளனர்.

மேலும் டோனியின் எதிர்காலம் குறித்து டோனியிடமும் தேர்வு குழுவினரிடமும் பேச உள்ளதாகாவும் கங்குலி தெரிவித்து இருந்தார். இந்நிலையில்  கங்குலியிடம், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசி உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்து கொண்டே “ஏன்? இப்போது அவர் என்ன செய்துள்ளார்“ என்றார்.

கங்குலியும் ரவிசாஸ்திரியும் நேருக்கு நேர் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடவில்லை என்றாலும் அவர்களுக்குள் சிறு விரிசல் உள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இருந்த போது அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது
இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை 3-வது நாளிலேயே சுருட்டிய இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வங்கதேச அணி வீரர்கள் 2 பேர், மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. 31-வது பிறந்த நாள் : தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்ட விராட்கோலி
31-வது பிறந்த நாள் கொண்டாடி வரும் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்.
4. 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம்
மெக்காஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள் 2019 பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடத்தில் உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டார்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.