கிரிக்கெட்

2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் + "||" + India close in on clean-sweep

2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

2-வதுஇன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா திணறல்; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ராஞ்சி,

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 51 ரன்களும் விளாசினர். தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளும், காஜிசோ ரபடா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல்,  162 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனையடுத்து, பாலோ-ஆன் ஆன தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. 

2-வது இன்னிங்சிலும் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், தென் ஆப்பிரிக்க அணி தத்தளித்தது.  டி காக், கேப்டன் டு பிளசிஸ் உள்பட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால், தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை நோக்கி வேகமாக நடைபோட்டது. 3- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 46 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளையும் , உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அஷ்வின் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்க அணி இன்னும் 203 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாலும்,  2 நாள் ஆட்டம் இருப்பதாலும், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டி: 2023-ம் ஆண்டு நடக்கிறது
இந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டிகள் 2023-ம் ஆண்டு நடக்க உள்ளது.
2. 2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்
இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை வங்காளதேச அணி நிர்ணயித்துள்ளது.
3. இந்தியா, வங்காளதேச அணியினருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நன்றி
இந்தியா, வங்காளதேச அணியினருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.
4. இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
டாஸ் வென்ற வங்காளதேச கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
5. இந்தியா-வங்காளதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.