கிரிக்கெட்

நேர்மையான நோக்குடன் பணியாற்றினால் அதற்கேற்ற முடிவுகள் கிடைக்கும்; விராட் கோலி + "||" + Till we work with honest intent, results will follow: Kohli

நேர்மையான நோக்குடன் பணியாற்றினால் அதற்கேற்ற முடிவுகள் கிடைக்கும்; விராட் கோலி

நேர்மையான நோக்குடன் பணியாற்றினால் அதற்கேற்ற முடிவுகள் கிடைக்கும்; விராட் கோலி
நேர்மையான நோக்குடன் நாம் பணியாற்றும் வரை அதற்கேற்ற முடிவுகள் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கும் என விராட் கோலி கூறியுள்ளார்.
ராஞ்சி,

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இதனை தொடர்ந்து நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசும்பொழுது, நேர்மையான நோக்குடன் நாம் தொடர்ந்து பணியாற்றும்பொழுது, அதற்கேற்ற முடிவுகள் நம்மை பின்தொடரும்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.  அதற்காக நாம் தொடர்ந்து போட்டியிடும் வரை பலன்களும் சிறந்த முறையில் கிடைக்கும் என்று கூறினார்.

இந்த போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 34 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினர்.

இதுபற்றி கூறிய அவர், சுழற்பந்து வீச்சு எப்பொழுதும் நம்முடைய வலிமை.  பேட்டிங் செய்வது நமக்கு ஒருபொழுதும் பிரச்சனை இல்லை.  இஷாந்த் அனுபவம் வாய்ந்த ஒரே வீரர்.  ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் நாம் அதிக ரன்களை குவித்துள்ளோம்.

எதிரணியினரை வீழ்த்தும் வகையில் கேட்ச் செய்வதிலும் நம்முடைய அணி வீரர்கள் திறமையாக செயல்படுகின்றனர்.  அதிக அனுபவம் இன்றி கூட, நாம் சிறப்புடன் விளையாடி உள்ளோம்.  எந்த இடத்திலும் நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

இதனை ஒப்பு கொள்வது போல் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பிளெஸ்சிஸ் கூட, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் திறமையே அவர்களது வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எல்லா நேரங்களிலும் அவர்கள் சரியான இடத்திலும், ஸ்டம்புகளை வீழ்த்தும் வகையிலும் பந்துகளை வீசினர் என்று கூறினார்.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 முறை வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்
விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
2. கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு
கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
3. ‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்
தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் கூறினார்.
4. செல்போன் உதிரிபாகத்தில் கோலியின் உருவத்தை உருவாக்கிய ரசிகர்
செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.