கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் + "||" + India continues to top the World Test Championship list

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றது.

ஆ‌ஷஸ் தொடரில் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021-ம் ஆண்டு வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடும். ஒரு போட்டி தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். அனைத்து தொடர்கள் முடிவில் புள்ளி பட்டியலில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் 120 புள்ளிகளை பெற்றிருந்த இந்திய அணி, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதால் மேலும் 120 புள்ளிகளை வசப்படுத்தி மொத்தம் 240 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கின்றது.