கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டார் + "||" + Sourav Ganguly officially appointed as 39th BCCI president

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டார்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டார்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுகொண்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக விஜயநகரம் மகாராஜாவுக்குப் பிறகு இரண்டாவதாக தேர்ந்து எடுக்கப்பட்ட  இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி ஆவார்.

தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக மத்திய மந்திரி அனுராக் தாகூரின் தம்பியும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜும், துணை தலைவராக மஹிம் வர்மாவும் பொறுப்பேற்று கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது
இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை 3-வது நாளிலேயே சுருட்டிய இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வங்கதேச அணி வீரர்கள் 2 பேர், மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. 31-வது பிறந்த நாள் : தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்ட விராட்கோலி
31-வது பிறந்த நாள் கொண்டாடி வரும் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்.
4. 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம்
மெக்காஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள் 2019 பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடத்தில் உள்ளார்.
5. 'அவர் இப்போது என்ன செய்தார்? -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி நிருபர்கள் சந்திப்பின்போது ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்துள்ளார்.