கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு + "||" + Virat Kohli Rested, Rohit Sharma To Lead India's 15-Member T20I Squad For Three-Match Series Against Bangladesh

வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 3 ஆம் தேதி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியும், 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே ராஜ்கோட் மற்றும் நாக்பூரில் 2-வது 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. 

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  15 பேர் கொண்ட இந்திய அணியில், கேப்டன் விராட் கோலி இடம் பெறவில்லை.  தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன்,  ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்ட்யா, ரகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, ஷிவம் துபே, சர்துல் தாகூர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, இந்தத் தொடரில் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விவரம்-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, அஜின்க்யா ரகானே, ஹனுமா விகாரி, சகா, ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், முகம்மது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மான் கில், ரிஷாப் பண்ட், 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2-து டெஸ்ட் போட்டி நவம்பர்22 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது 


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
2. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.
3. வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
வங்காளதேசத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.
5. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்
விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...