கிரிக்கெட்

காரை சுத்தம் செய்யும் டோனி, ஸிவா -சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது + "||" + MS Dhoni And Daughter Ziva Clean His New Car Together In Sweet Video

காரை சுத்தம் செய்யும் டோனி, ஸிவா -சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது

காரை சுத்தம் செய்யும் டோனி, ஸிவா -சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது
டோனி தனது மகளுடன் காரை சுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ராஞ்சி, 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி, ஒரு கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. ஏராளமான பைக்குகள், கார்களை டோனி தன்வசம் வைத்துள்ளார். ஓய்வு நேரத்தில் தனது செல்லப்பிரணிகளுடன் விளையாடுவது, பைக்கில் உலா வருவது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், டோனி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகியுள்ளது. டோனி தனது விலை உயர்ந்த கார் ஒன்றை, 4-வயதான தனது மகள் ஸிவாவுடன் இணைந்து சுத்தம் செய்யும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ”சிறிய உதவி எப்போதும், நீண்ட தூரம் செல்லும். குறிப்பாக,  இது மிகப்பெரிய வாகனம் என்று நீங்கள் உணரும் போது” என்று டோனி வீடியோவுக்கு கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

உலகில் அதிக அளவு வருமானத்தை ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில்  இடம் பிடித்துள்ள டோனி, மிக  எளிமையாக தனது மகளுடன் காரை சுத்தம் செய்வது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘டோனியை போன்று சாதிக்க விரும்புகிறேன்’- கேரி
டோனியை போன்று சாதிக்க விரும்புவதாக அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.
2. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று இரவு நடக்கிறது.
3. மனித மேம்பாடு குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
மனித மேம்பாடு குறியீட்டில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
4. இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டோனி, நிகழ்ச்சி ஒன்றில் இந்தி பாடலை பாடியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகி வருகிறது.
5. தீவிர வலைப்பயிற்சியில் டோனி, ரசிகர்கள் உற்சாகம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி, மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.