கிரிக்கெட்

10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார், யுவராஜ்சிங் + "||" + Yuvraj Singh is playing 10 over cricket match

10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார், யுவராஜ்சிங்

10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார், யுவராஜ்சிங்
10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்சிங் விளையாட உள்ளார்.
துபாய்,

அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான மராத்தா அரேபியன்ஸ் அணியில் விளையாட இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் பிராவோ தலைமையிலான இந்த அணியில் 20 ஓவர் இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், நஜீபுல்லா ஜட்ரன் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர். 37 வயதான யுவராஜ்சிங் கடந்த ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.