கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அபிமன்யு மிதுன் + "||" + Vijay Hazare Trophy: Abhimanyu Mithun takes hat trick

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அபிமன்யு மிதுன்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அபிமன்யு மிதுன்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அபிமன்யு மிதுன்.
பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. கர்நாடகா அணியைச் சேர்ந்த பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கர்நாடக வீரராகியுள்ளார் மிதுன். தமிழ்நாடு அணி பேட்டிங் செய்த இறுதி ஓவரின் போது தமிழக வீரர்கள் ஷாருக்கான்(27), முகமது(10) மற்றும் முருகன் அஸ்வின்(0) ஆகிய மூவரும் அபிமன்யுவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து கேட்ச் ஆகினர்.

முன்னதாக முதல் ஓவரில் முரளி விஜய்(0) மற்றும் 46-வது ஓவரில் விஜய் சங்கர்(38) ஆகியோரின் விக்கெட்டுகளையும் அபிமன்யு மிதுன் கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை யாருக்கு? தமிழ்நாடு-கர்நாடகா இன்று பலப்பரீட்சை
விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப்போட்டியில், தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோத உள்ளன.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் 17 வயதான ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி பீகாரை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது.
4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வெற்றியுடன் தொடக்கம்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.