கிரிக்கெட்

தியோதர் கோப்பை கிரிக்கெட்:இந்திய ‘ஏ’ அணியில் அஸ்வின் + "||" + Theodore Cup Cricket: Ashwin on India's A team

தியோதர் கோப்பை கிரிக்கெட்:இந்திய ‘ஏ’ அணியில் அஸ்வின்

தியோதர் கோப்பை கிரிக்கெட்:இந்திய ‘ஏ’ அணியில் அஸ்வின்
தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.
மும்பை, 

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

தியோதர் கோப்பை கிரிக்கெட்

தியோதர் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 31-ந் தேதி முதல் நவம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’ அணிகளை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

தேசிய அணிக்காக விளையாடும் வீரர்கள் பலரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

இந்திய ‘ஏ’ அணியில் ஆர்.அஸ்வின்

இந்திய ‘ஏ’ அணியின் கேப்டனாக ஹனுமா விஹாரியும், இந்திய ‘பி’ அணியின் கேப்டனாக பார்த்தீவ் பட்டேலும், இந்திய ‘சி’ அணியின் கேப்டனாக சுப்மான் கில்லும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தியோதர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா ஏ: ஹனுமா விஹாரி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஈஸ்வரன், விஷ்ணு வினோத், அமன்தீப் காரே, அபிஷேக் ராமன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, ரவி பிஸ்னோய், ஆர்.அஸ்வின், ஜெய்தேவ் உனட்கட், சந்தீப் வாரியர், சித்தார்த் கவுல், பார்கவ் மெராய்.

‘பி’ அணியில் விஜய் சங்கர்

இந்தியா பி: பார்த்தீவ் பட்டேல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பிரியங்க் பன்சால், ஜெய்ஸ்வால், பாபா அபராஜித், கேதர் ஜாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஷபாஸ் நதீம், அனுகுல் ராய், கவுதம், விஜய் சங்கர், முகமது சிராஜ், ருஷ் கலாரியா, யாரா பிரித்விராஜ், நிதிஷ் ராணா.

இந்தியா சி: சுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், அன்மோல் பிரீத்சிங், சூர்யகுமார் யாதவ், பிரியம் கார்க், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் பட்டேல், மயங்க் மார்கண்டே, ஜலாஜ் சக்சேனா, அவேஷ்கான், தவால் குல்கர்னி, இஷான் போரெல், பதானியா, விராட்சிங்.