கிரிக்கெட்

இந்திய தொடரில் இருந்து வங்காளதேச வீரர் தமிம் இக்பால் விலகல் + "||" + From the Indian series Bangladesh batsman Tamim Iqbal distortion

இந்திய தொடரில் இருந்து வங்காளதேச வீரர் தமிம் இக்பால் விலகல்

இந்திய தொடரில் இருந்து வங்காளதேச வீரர் தமிம் இக்பால் விலகல்
இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் ஆட இருக்கும் வங்காளதேச அதிரடி ஆட்டக்காரர் தமிம் இக்பால் விலகியுள்ளார்.
டாக்கா, 

இந்தியாவுக்கு வருகை தரும் வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து வங்காளதேச அதிரடி ஆட்டக்காரர் தமிம் இக்பால் விலகியுள்ளார். அவரது மனைவிக்கு அடுத்த வாரத்தில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. மனைவியை அருகில் இருந்து கவனிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அணியில் தமிம் இக்பாலுக்கு பதிலாக இம்ருல் கேயஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய தொடருக்கான வங்காளதேச 20 ஓவர் அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), லிட்டான் தாஸ், இம்ருல் கேயஸ், சவும்யா சர்கார், முகமது நைம், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, ஆபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், அரபாத் சன்னி, அல்-அமின் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான், ஷபியுல் இஸ்லாம்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தொடரில் இருந்து ரபடா விலகல்
இந்திய தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்கா வீரர் ரபடா விலகி உள்ளார்.