கிரிக்கெட்

விராட் கோலி-இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு + "||" + Virat Kohli and Team India under terror threat, Delhi Police asked to tighten security: Report

விராட் கோலி-இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு

விராட் கோலி-இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு  அதிகரிப்பு
விராட் கோலி-இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

வங்காள தேச கிரிக்கெட் அணி  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று  20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி வருகிற 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்  நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  தேசிய புலனாய்வு அமைப்புக்கு ஒரு மர்ம கடிதம் வந்து உள்ளது. அதில் கேரளாவின் கோழிக்கோட்டை தளமாகக் கொண்ட அகில இந்திய லஷ்கர்,   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும்  அரசியல் தலைவர்களை குறிவைத்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 

அந்த கடிதத்தின் பட்டியலில்  பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதீய ஜனதா கட்சி  தலைவரான மூத்த  தலைவர் அத்வானி, பாஜக  தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஆர்.எஸ்.எஸ்  தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பெயர்  இடம் பெற்று உள்ளது.

இந்த கடிதத்தை தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) அனுப்பியுள்ளது.

இந்த கடிதம் ஒரு மோசடியாக இருக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன, ஆனால் அச்சுறுத்தல் அதிகரித்ததால்,  விராட்கோலி மற்றும் வீரர்களின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தலால் போலந்து அதிபர் தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் போலந்து நாட்டில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள கல்லூரி பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள கல்லூரி பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு.
3. திருவாரூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு: 1,200 போலீசார் பாதுகாப்பு
144 தடை உத்தரவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்ட 3 எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்கள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 3 எம்.பி.க்களும், 2 எம்.எல்.ஏ.க்களும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.