கிரிக்கெட்

சையத் முஸ்தாக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு + "||" + Syed Mustang Cup Twenty20 Over: Tamil Nadu Team Announces

சையத் முஸ்தாக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

சையத் முஸ்தாக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
சையத் முஸ்தாக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணிக்கான வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை, 

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் கேப்டனாக நீடிக்கிறார். அணி விவரம் வருமாறு:-

முரளிவிஜய், ஜெகதீசன், ஹரி நிஷாந்த், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), பாபா அபராஜித், ஷாருக்கான், ஆர்.அஸ்வின், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், டி.நடராஜன், ஜி.பெரியசாமி, விக்னேஷ், முகமது, கவுசிக்.

மேலும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்ததும் தமிழக அணியுடன் இணைவார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய அபினவ் முகுந்துக்கு இடம் கிடைக்கவில்லை.