மன அழுத்த பிரச்சினை: கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு


மன அழுத்த பிரச்சினை: கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு
x
தினத்தந்தி 31 Oct 2019 7:42 AM GMT (Updated: 31 Oct 2019 7:42 AM GMT)

மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், அதிரடிக்கு பெயர் போனவர். தனத்து அசாத்திய ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள மேக்ஸ்வெல், சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குறிப்பிடும்படியாக ஆடவில்லை. 

தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வரும் அவர், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், மேக்ஸ்வேல்  மன அழுத்த பிரச்சினை காரணமாக  கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருக்க உள்ளார். தனது பிரச்சினையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேக்ஸ்வேலுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை மேக்ஸ்வெல் விளாசித்தள்ளியது  குறிப்பிடத்தக்கது. 

Next Story