கிரிக்கெட்

இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி + "||" + India vs Bangladesh 1st T20I To Be Played In Delhi As Planned: Sourav Ganguly

இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி

இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி
இந்தியா -வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 -இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன. 

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.  டெல்லி காற்றில் மூன்று நான்கு மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், திட்டமிட்டபடி, டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்தன. 

இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசுகிறது-ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
மீன் தண்ணீருக்கு செல்வதைப்போல மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசிவருகிறது என ஐ.நா.வின் இந்திய நிரந்தர துணை தூதர் நாகராஜ் நாயுடு கூறி உள்ளார்.
2. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி பந்தாடியது இந்தியா
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, அறிமுக அணியான ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி துவம்சம் செய்தது.
4. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
5. ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி உதவி: கோத்தபய ராஜபக்சேவிடம் அஜித் தோவல் உறுதி
பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி வழங்கும் என்று கோத்தபய ராஜபக்சேவிடம் அஜித் தோவல் உறுதி அளித்தார்.