கிரிக்கெட்

பந்து தாக்கி ரோகித் சர்மா காயம் + "||" + Rohit Sharma injured with ball

பந்து தாக்கி ரோகித் சர்மா காயம்

பந்து தாக்கி ரோகித் சர்மா காயம்
பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ரோகித் சர்மா காயமடைந்தார்.
புதுடெல்லி,

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடப்பதையொட்டி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார். வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் பயிற்சிக்காக இலங்கையை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் அழைக்கப்பட்டு இருந்தார். அவர் வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார். அதன் பிறகு மீண்டும் பயிற்சிக்கு வரவில்லை. அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை தீயணைப்பு வீரர் ஒருவர் காப்பாற்றினார்.
2. தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது 4 டாக்டர்கள் காயம்
கிருமாம்பாக்கம் அருகே நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்தது. காரில் இருந்த 4 டாக்டர்கள் காயமடைந்தனர்.
3. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
4. லாராவின் 400 ரன் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் - வார்னர் கணிப்பு
லாராவின் 400 ரன்கள் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என வார்னர் தெரிவித்துள்ளார்.
5. திருச்செங்கோட்டில் கார்-பஸ் மோதல்; 12 பேர் காயம்
திருச்செங்கோட்டில் காரும், பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.