மேட்ச் பிக்ஸிங் : பாகிஸ்தான் வீரர்கள் சிறிய பணத்திற்காக தங்களை விற்றுக்கொண்டார்கள்- சோயிப் அக்தர் வேதனை + "||" + I was playing against 22 people Shoaib Akhtar talks about former Pakistan teammates and their match-fixing aspersions
மேட்ச் பிக்ஸிங் : பாகிஸ்தான் வீரர்கள் சிறிய பணத்திற்காக தங்களை விற்றுக்கொண்டார்கள்- சோயிப் அக்தர் வேதனை
மேட்ச் பிக்ஸிங் ஈடுபட்ட வீரர்கள் சிறிய பணத்திற்காக தங்களை விற்றுக்கொண்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறினார்.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ' ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது;-
பாகிஸ்தானை என்னால் ஒருபோதும் ஏமாற்ற முடியாது, மேட்ச் பிக்ஸிங் இல்லை என்ற நம்பிக்கையில் நான் எப்போதும் இருந்தேன். அப்போது நான் மேட்ச் பிக்சர்களால் சூழப்பட்டேன்.
2011 ஆம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் பங்கு வகித்ததற்காக வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது அது முதல் பாகிஸ்தான் அணி பலவீனமடைந்தது.
அவர்கள் மட்டுமல்ல, தொடக்க பேட்ஸ்மேன் சல்மான் பட் கூட ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்று ஐந்தாண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அமீருக்கும் ஆசிபுக்கும் இது குறித்து புரிய வைக்க முயன்றேன். என்ன திறமை இருந்தும் என்ன எல்லாம் வீண். இதைப் பற்றி நான் கேள்விப்பட்ட போது, நான் மிகவும் வருத்தப்பட்டேன், கோபப்பட்டு நான் சுவரில் குத்தினேன்.
நான் 22 பேருக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தேன். 11 பேர் அடுத்த அணி வீரர்கள் மற்றவர்கள் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் மேட்ச் பிக்சர் யார் என்று யாருக்குத் தெரியும்.
மேட்ச் பிக்ஸிங் குறித்து ஆசிப் என்னிடம் கூறினார். அவர்கள் எந்த போட்டிகளை நிர்ணயித்தார்கள், எப்படி செய்தார்கள் என்று.
பாகிஸ்தானின் இரண்டு சிறந்த பந்து வீச்சாளர்கள், புத்திசாலி மற்றும் இரண்டு சரியான வேகப்பந்து வீச்சாளர்கள் வீணடிக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சிறிய பணத்திற்கு தங்களை விற்றுக் கொண்டார்கள் என கூறினார்.