முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல்


முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Nov 2019 10:44 PM GMT (Updated: 2 Nov 2019 10:44 PM GMT)

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இலங்கையை மூன்று ஆட்டங்களிலும் புரட்டியெடுத்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் தொடரிலும் அதே கம்பீரத்துடன் பயணிக்க ஆர்வமுடன் உள்ளது. 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா இந்த தொடரை முழுமையாக கைப்பற்றினால் முதலிடத்திற்கு முன்னேறலாம். ‘நம்பர் ஒன்’ அணியான பாகிஸ்தான் அணி, புதிய கேப்டன் பாபர் அசாம் தலைமையில் சவாலுக்கு ஆயத்தமாகியுள்ளது.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.


Next Story