கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி + "||" + 3ed T20 against England: New Zealand wins

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
நெல்சன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. காலின் டி கிரான்ட்ஹோம் 55 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) மார்ட்டின் கப்தில் 33 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி டேவிட் மலான் (55 ரன்), ஜேம்ஸ் வின்ஸ் (49 ரன்) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பினால் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்களுடன் (14.4 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது.


அதன் பிறகு அடுத்த 18 பந்துகளில் 10 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தள்ளாடியது. அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி நேப்பியரில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து’ - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.
3. இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக உயர்ந்துள்ளது.
4. இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?
இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
5. இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.