பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படுவாரா?


பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படுவாரா?
x
தினத்தந்தி 5 Nov 2019 11:57 PM GMT (Updated: 5 Nov 2019 11:57 PM GMT)

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படுவாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா,

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்களாக இருந்த அனைவரையும் போட்டியின் வர்ணனையாளர் அறைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அனுமதி கேட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இ-மெயில் அனுப்பி இருக்கிறது. முன்னாள் டெஸ்ட் கேப்டன்களின் போட்டி அனுபவம் குறித்து கேட்டு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் டோனியையும் கவுரவ வர்ணனையாளராக கலந்து கொள்ளுமாறு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்து இருக்கிறது. இதனால் டோனி வர்ணனையாளர் குழுவில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story