ஐபிஎல் துவக்க விழாவை ரத்து செய்கிறது பிசிசிஐ?


ஐபிஎல் துவக்க விழாவை ரத்து செய்கிறது பிசிசிஐ?
x
தினத்தந்தி 6 Nov 2019 3:47 PM GMT (Updated: 6 Nov 2019 3:47 PM GMT)

ஐபிஎல் துவக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்தப்போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடர் பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கப்படும்.  கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

ஆனால், வரும் ஆண்டில் இருந்து ஐபிஎல் துவக்க விழாவை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தொடக்க விழாக்களால் வீண் செலவுதான் எனவும் ரசிகர்களுக்கு இதில் எந்த ஆர்வமும் இல்லை என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.  

கடந்த காலங்களில் ஐபிஎல் துவக்க விழாவுக்கு மட்டும் ரூ.30 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடந்த ஐபிஎல் போட்டியின் போது துவக்க விழா ரத்து செய்யப்பட்டது. 

Next Story