சையத் முஸ்தாக் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி


சையத் முஸ்தாக் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 8 Nov 2019 11:10 PM GMT (Updated: 8 Nov 2019 11:10 PM GMT)

சையத் முஸ்தாக் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.

தும்பா,

11-வது சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, கேரள மாநிலம் தும்பாவில் நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளாவை சந்தித்தது. முதலில் பேட் செய்த தமிழக அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பாபா அபராஜித் 35 ரன்னும் (காயத்தால் ஓய்வு), முகமது 34 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 33 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய கேரள அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜி.பெரியசாமி, டி.நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

விசாகப்பட்டினத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியனான கர்நாடக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. 20 ஓவர் போட்டியில் கர்நாடக அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 15-வது வெற்றி இதுவாகும்.


Next Story