ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:42 PM GMT (Updated: 9 Nov 2019 11:42 PM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

லக்னோ,

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பொதுவான இடமான லக்னோவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. நிகோலஸ் பூரன் (67 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்), இவின் லீவிஸ் (54 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 45.4 ஓவர்களில் 200 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. முன்னதாக பனிப்புகை காரணமாக ஆட்டத்தை பாதியில் நிறுத்தும்படி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க நடுவர்கள் மறுத்து விட்டனர்.

Next Story