கிரிக்கெட்

‘நான் விராட் கோலி’ - வார்னர் மகளின் ருசிகர வீடியோ + "||" + 'I am Virat Kohli' - A delicious video of Warner's daughter

‘நான் விராட் கோலி’ - வார்னர் மகளின் ருசிகர வீடியோ

‘நான் விராட் கோலி’ - வார்னர் மகளின் ருசிகர வீடியோ
நான் விராட் கோலி என வார்னர் மகள் கூறும் ருசிகர வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர்- கேன்டிஸ் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது 2-வது மகள் 3½ வயதான இன்டி ரே தனது வீட்டில் கிரிக்கெட் மட்டையுடன் பேட்டிங் செய்வது போன்ற ஒரு வீடியோ காட்சியை கேன்டிஸ் இன்ட்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், வார்னர் பந்தை எறிகிறார். பேட்டிங் செய்யும் இன்டி ரே, ஒவ்வொரு முறையும் ‘நான் விராட் கோலி’ என்று சொல்லியபடி பந்தை அடித்து விரட்டுகிறாள். இது குறித்து கேன்டிஸ் கூறுகையில், ‘எனது குட்டி மகள் இந்தியாவில் அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறாள். அதன் தாக்கமோ என்னவோ விராட் கோலி போன்று ஆக விரும்புகிறாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக் கைது
முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக்கை போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2. தாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ
சீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
3. ரசிகர்கள் கூட்டத்திற்காக நான் பந்தை பறக்க விடமாட்டேன்- விராட் கோலி
ரசிகர்களின் கூட்டத்திற்காக பந்தை பறக்க விடமாட்டேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. சிகிச்சைக்கு வந்த விவசாயிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவமனை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. வங்காளதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல்
இந்தியா விளையாடும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விராட் கோலி அசத்தினார்.