சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: உத்தரபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி


சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: உத்தரபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி
x
தினத்தந்தி 11 Nov 2019 11:51 PM GMT (Updated: 11 Nov 2019 11:51 PM GMT)

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில், உத்தரபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வியை தழுவியது.

திருவனந்தபுரம்,

11-வது சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-உத்தரபிரதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த உத்தரபிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 61 ரன்னும், முரளி விஜய் 51 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய உத்தரபிரதேச அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்த தமிழக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.


Next Story