கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி + "||" + West Indies won the 3rd ODI against Afghanistan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.
லக்னோ,

வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அஸ்ஹார் ஆப்கன் 86 ரன்னும், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முகமது நபி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 145 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 109 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 42 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதையும், ரோஸ்டன் சேஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக் கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது போட்டி லக்னோவில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களை கொல்ல தலீபான்களுக்கு ரஷியா பணம் வழங்கியதா?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களை கொண்ட தலீபான் பயங்கரவாத இயக்கம் ரஷியா பணம் வழங்கியதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
3. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க முடிவு
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 17 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 வீரர்கள் பலியாகினர்.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை - மைக்கேல் ஹோல்டிங்
கடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.