கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்தது - சோயிப் அக்தர் பாராட்டு + "||" + The Indian team's performance in the 20-match series against Bangladesh was high - Shoaib Akhtar Appreciation

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்தது - சோயிப் அக்தர் பாராட்டு

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்தது - சோயிப் அக்தர் பாராட்டு
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்ததாக சோயிப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

வங்காளதேச அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாட்டை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவில் கூறியிருப்பதாவது:-


வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் தாங்கள் தான் தலைவன் (பாஸ்) என்பதை இந்திய அணி நிரூபித்துள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், சரிவில் இருந்து நேர்த்தியாக மீண்டு வந்து அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. பேட்டிங்கில் ரோகித் சர்மா ஜொலித்தார். ரோகித் சர்மா திறமையான வீரர். அவரால் எந்த தருணத்திலும் ரன் குவிக்க முடியும்.

3-வது 20 ஓவர் போட்டி பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. அனுபவம் இல்லாத வீரர்களை கொண்டு இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்தது. வங்காளதேச அணியின் உத்வேகமான போராட்டமும் பாராட்டுக்குரியதாகும். தற்போதைய வங்காளதேசம் சாதாரணமான அணி கிடையாது. வங்கப்புலிகள் எந்த அணியையும் திணறடிக்கும் சக்தி படைத்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.
2. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.