கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு + "||" + One-day cricket rankings: Kohli, Bumrah extended to top

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா ஆகியோர் முதலிடத்தில் நீடித்து வருகிறார்கள்.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும் (863 புள்ளி), 3-வது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் (834 புள்ளி) உள்ளனர்.


பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் 2-வது இடமும் (740 புள்ளி), ஆப்கானிஸ்தானின் முஜீப் ரகுமான் 3-வது இடமும் (707 புள்ளி) வகிக்கிறார்கள்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்த வரிசையில் டாப்-10 இடத்திற்குள் ஒரே இந்தியராக ஹர்திக் பாண்ட்யா (10-வது இடம்) இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு?
வங்காளதேச தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில்,கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என்று கோலி நம்புகிறேன் என்றார்.
3. டி வில்லியர்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கோலி, யுவராஜ் சிங்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டி வில்லியர்சுக்கு கோலி, யுவராஜ்சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
4. சச்சின், லாரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..!
கிரிக்கெட் உலகில் பல வியத்தகு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி, மற்றொரு சாதனையை படைக்க உள்ளார்.