கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார், டிரென்ட் பவுல்ட் + "||" + Trent Boult switched to Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார், டிரென்ட் பவுல்ட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார், டிரென்ட் பவுல்ட்
டெல்லி அணிக்காக விளையாடிய டிரென்ட் பவுல்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கை ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்டை (நியூசிலாந்து) பரஸ்பர பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்புத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.