கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 493 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் + "||" + India declare after 343-run lead

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 493 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 493 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 493 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இந்தூர், 

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 150 ரன்னில் சுருண்டது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆம் நாளான நேற்று, மயங்க் அகர்வாலின் (243 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் , நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து இருந்தது. ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கும் முன்பாகவே, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து கொள்வதாக இந்திய அணி அறிவித்தது.  இதையடுத்து, 343 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய வங்காளதேச அணி பேட் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
2. நியூசிலாந்தில், இந்தியாவில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளியால் பரபரப்பு
நியூசிலாந்தில், இந்தியாவில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. இந்திய, சீன எல்லையில் இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர ரோந்து
இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன.
4. லடாக் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு- கூடுதல் உஷார் நிலையில் இருக்க படைகளுக்கு அறிவுறுத்தல்
இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டு உள்ள லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவானே நேற்று ஆய்வு செய்தார்.
5. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.