கிரிக்கெட்

7 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி + "||" + All out for 7! Rivals win by 754 runs

7 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி

7 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி
பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 7 ரன்களில் ஆல் அவுட் ஆகி 754 ரன்கள் வித்தியாசத்தில் விவேகானந்தா பள்ளி வெற்றி பெற்றது.
மும்பை

ஹாரிஸ் ஷீல்டுக்கான  பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி  மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில்  சுவாமி விவேகானந்தா இண்டர்நேஷனல் பள்ளியும், குழந்தைகள் நலப் பள்ளியும்  ஆசாத் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த  சுவாமி விவேகானந்தா பள்ளி  39 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு  761 ரன்கள் எடுத்திருந்தது. 

அதிகபட்சமாக மீட் மாயேகர் என்ற மாணவர்  அவுட் இல்லாமல் 134 பந்துகளுக்கு  338 ரன்கள் ( 56X4 7X6) எடுத்து இருந்தார்.கிருஷ்ணா பார்ட்டே  95 , இஷான் ராய்  67 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்த அணியின்  சிறந்த வீரர்கள்  மும்பை 16 வயதுக்குட்பட்ட அணி முகாமில் இருப்பதால் இந்த ரன்களை குவிக்க முடிந்தது.இந்த பள்ளியின் பழைய மாணவர்களில் இந்தியாவின்  சிறந்த  பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விளையாடிய குழந்தைகள் நல பள்ளி 7 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்த ரன்களும் 6 ஓய்டு மற்றும் ஒரு பை எக்ஸ்ட்ரா மூலம் கிடைத்தது ஆகும்.  பேட்டால் இந்த அணி பந்தை தொடக்கூட இல்லை. இதனால் விவேகானந்தா  பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  விவேகானந்தா பள்ளியின் அலோக் பால் 3 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுளை எடுத்தார்.  விரோத் வசி 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார். மற்றும் 2 ரன் அவுட்டுகள்.

சுருக்கமான ஸ்கோர் : 39 ஓவர்களில் விவேகானந்தா பள்ளி 761/4 (மாயேகர் 338 ஆட்டமிழக்காமல், கிருஷ்ணா பார்ட்டே 95, இஷான் ராய் 67) குழந்தைகள் நல பள்ளி 7 (அலோக் பால் 6/3, வரோட் வேஸ் 2/3) ஐ 754 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.
2. 2019ஆம் ஆண்டின் ஐசிசி விருதுக்கு விராட் கோலி- ரோகித் சர்மா தேர்வு
2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கும், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருது இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
4. 2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க தான் டைவ் அடித்திருக்க வேண்டும் என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
5. காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வென்று காட்டுவோம்-ஆஸ்திரேலியா
காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என கேப்டன் பிஞ்ச் கூறினார்.