வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி + "||" + India Women claim 5-0 T20 series sweep over West Indies
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒயிட்வாஷ் செய்தது.
ப்ரொவிடன்ஸ் (கயானா),
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இதில், முதல் 4 போட்டிகளில் இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்ற நிலையில், 5 வது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, தொடரையும் 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.