கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + "||" + Day-night Test against Bangladesh: India won by an innings and a series

வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
கொல்கத்தா,

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தியாவில் நடைபெற்ற முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் பிங்க் (இளஞ் சிவப்பு) நிற பந்து பயன்படுத்தப்பட்டது.


முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டது.

பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட்கோலி 136 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி, இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். 2-வது நாள் ஆட்டம் முடிவில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து இருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 59 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முஷ்பிகுர் ரஹிம், எபாதத் ஹூசைன் ஆகியோர் விளையாடினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தங்களது அபாரமான பந்துவீச்சு மூலம் வங்காளதேச வீரர்களை கலங்கடித்தனர். எபாதத் ஹூசைன் (0) உமேஷ் யாதவ் வீசிய ஷாட் பிட்ச் பந்து வீச்சை தடுத்து விளையாட முயலுகையில் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து அல்-அமின் ஹூசைன், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய முஷ்பிகுர் ரஹிம் (74 ரன்கள், 96 பந்துகளில் 13 பவுண்டரியுடன்) உமேஷ் யாதவ் பந்து வீச்சை அடித்து ஆடினார். ஆனால் பந்து மேல்நோக்கி எழும்பி ரவீந்திர ஜடேஜா கையில் தஞ்சம் அடைந்தது. அடித்து ஆடிய அல்-அமின் ஹூசைன் (21 ரன்கள்) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 41.1 ஓவர்களில் 195 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டம் 47 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அபு ஜெயத் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். முந்தைய நாளில் காயம் காரணமாக வெளியேறிய மக்முதுல்லா நேற்று களம் இறங்கவில்லை.

இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். 142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த 12-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். இதில் எல்லா போட்டிகளிலும் முடிவு கிடைத்து இருக்கிறது. இந்திய அணி தனது முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதலிடம்

9 அணிகள் இடையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்திய அணி 120 புள்ளிகள் பெற்றதுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதில் ‘டாப்-5’ இடங்கள் பிடித்துள்ள அணிகள் விவரம் வருமாறு:- 
  உள்நாட்டில் தொடர்ச்சியாக 12-வது டெஸ்ட் தொடரை வென்று இந்தியா அசத்தல்

கொல்கத்தாவில் நடந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் (பகல்-இரவு) கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை ஊதி தள்ளிய இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்ளூரில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 12-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்திய அணி உள்நாட்டில் 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இப்போது வரை (2019-ம் ஆண்டு நவம்பர்) தொடர்ச்சியாக வென்ற 12 டெஸ்ட் தொடர்கள் விவரம் வருமாறு:-
தொடர்புடைய செய்திகள்

1. கலீதா ஜியா- அவரது மகன் என்னை கையெறி வெடிகுண்டு மூலம் கொல்ல நினைத்தனர்- வங்காளதேச பிரதமர்
கலீதா ஜியா மற்றும் அவரது மகன் தாரெக் ரஹ்மான் ஆகியோர் என்னை கையெறி வெடிகுண்டு தாக்குதலில் கொல்ல நினைத்தனர் என வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து உள்ளார்.
2. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
3. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.
4. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.