கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பு + "||" + India vs West Indies: Pollard's extension as West Indies captain

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பு

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பு
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட்இண்டீஸ்-இந்தியா அணிகள் இடையே மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் டிசம்பர் 6-ந் தேதியும், 2-வது ஆட்டம் திருவனந்தபுரத்தில் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் 11-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ந் தேதியும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் 18-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கட்டாக்கில் 22-ந் தேதியும் நடக்கிறது.


இந்திய தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 20 ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் காயத்தில் இருந்து மீண்ட பாபியன் ஆலென், தினேஷ் ராம்டின் திரும்புகிறார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்த வீரர்கள் மாற்றமின்றி வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி மன்னர்கள் கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. கெய்ல் ஏற்கனவே இந்த ஆண்டில் எந்த போட்டியிலும் விளையாட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் வருமாறு:-

20 ஓவர் அணி: பாபியன் ஆலென், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், பிரன்டன் கிங், இவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரி, பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், தினேஷ் ராம்டின், ரூதர்போர்டு, சிமோன்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

ஒருநாள் போட்டி அணி: சுனில் அம்ரிஸ், ரோஸ்டன் சேஸ், காட்ரெல், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், இவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரி, பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ரோமாரியா ஷெப்பர்டு, ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை
இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல் என டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் வெளியிட்ட “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.
4. இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
5. இந்தியா, நேபாளம் இடையே சோதனை சாவடி: பிரதமர் மோடி, நேபாள பிரதமர் இணைந்து தொடங்கி வைத்தனர்
இந்தியா, நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடியை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.