கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர் + "||" + England's Joe Root and Barnes scored a century in the Test against New Zealand

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் ஆகியோர் சதம் விளாசினர்.
ஹாமில்டன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 375 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணியை கேப்டன் ஜோ ரூட்டும், ரோரி பர்ன்சும் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். தனது 2-வது சதத்தை அடித்த ரோரி பர்ன்ஸ் (101 ரன்) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (26 ரன்), புதுமுக வீரர் ஜாக் கிராவ்லி (1 ரன்) நிலைக்கவில்லை. மறுமுனையில் ஜோ ரூட் 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 14 இன்னிங்சில் மூன்று இலக்கத்தை நெருங்க முடியாமல் நெருக்கடிக்குள்ளான ஜோ ரூட் இந்த சதத்தின் மூலம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்.

இங்கிலாந்து அணி 99.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 114 ரன்களுடனும் (278 பந்து, 14 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ஆலிவர் போப் 4 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 106 ரன்கள் பின்தங்கியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் - போட்டி ‘டிரா’ ஆனது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த போட்டி டிராவில் முடிந்தது.
2. பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
3. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
4. பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வார்னர், லபுஸ்சேன் சதம் - ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், லபுஸ்சேன் சதம் அடித்தனர்.
5. பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.