கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + "||" + Australian team win innings in day-night Test cricket against Pakistan - Seized the series

பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
அடிலெய்டு,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 335 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். லபுஸ்சேன் 162 ரன் கள் எடுத்து ‘அவுட்’ ஆனார்.


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 302 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக யாசிர் ஷா 113 ரன்னும், பாபர் அசாம் 97 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

‘பாலோ-ஆன்’ ஆகிய பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. 287 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 16.5 ஓவர்களில் அந்த அணி 39 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. ஷான் மசூத் 14 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஷான் மசூத், ஆசாத் ஷபிக் தொடர்ந்து ஆடினார்கள். நிலைத்து நின்று ஆடிய ஷான் மசூத் (68 ரன்கள்) நாதன் லயன் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆசாத் ஷபிக் 57 எடுத்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சில் ஆட்டம் இழந் தார். பின்னர் களம் கண்ட வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். சற்று தாக்குப்பிடித்து நின்ற முகமது ரிஸ்வான் 45 ரன்னில் அவுட் ஆனார்.

பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 82 ஓவர்களில் 239 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். 1999-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய தனது கடைசி 14 டெஸ்ட் போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முகமது முசா 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாதன் லயன் 16-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முறையாகும். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார்.

  


  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 120 புள்ளியை தனதாக்கியது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. ஆஸ்திரேலியா 176 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
2. கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
3. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி நிதான ஆட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.
4. குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.
5. குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில், பாகிஸ்தான் பேசுவதை போலவே இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.