கிரிக்கெட்

‘ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்’ - கங்குலி விருப்பம் + "||" + Day-night Test cricket in every series - Ganguly option

‘ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்’ - கங்குலி விருப்பம்

‘ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்’ - கங்குலி விருப்பம்
ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. கொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடந்த இந்த பிங்க் நிற பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. சில ஆண்டுகளாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.


இந்த நிலையில் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகுந்த நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல இந்த போட்டி அவசியமாகும். ஒவ்வொரு டெஸ்டும் பகல்-இரவு போட்டியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு தொடரில் குறைந்தது ஒரு டெஸ்ட் பகல்-இரவு மோதலாக இருக்க வேண்டும். பகல்-இரவு டெஸ்டை நடத்தியதில் எனது அனுபவங்களை கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வேன். மற்ற இடங்களிலும் பிங்க் பந்து டெஸ்டை நடத்த முயற்சிப்போம். இப்போது ஒவ்வொரு வீரரும் இத்தகைய போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்கள். வெறும் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதை யாரும் விரும்பவில்லை’ என்றார்.

அதே சமயம் இந்திய கேப்டன் விராட் கோலி, பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பது எப்போதாவது மட்டுமே நடக்க வேண்டுமே தவிர வழக்கமாகி விடக்கூடாது என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வார்னர், லபுஸ்சேன் சதம் - ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், லபுஸ்சேன் சதம் அடித்தனர்.
2. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும்: பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் - அடிலெய்டில் இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
4. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கங்குலி
இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.