சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா


சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா
x
தினத்தந்தி 4 Dec 2019 12:24 PM GMT (Updated: 2019-12-04T17:54:08+05:30)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைக்க இருக்கிறார். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 399 சிக்சர்களை விளாசியிருக்கிறார் ரோகித் சர்மா.

இதன் மூலம் உலக அளவில் இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார். இதற்கு முன் வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (536 சிக்சர்கள்) மற்றும் பாகிஸ்தான் வீரர் சாஹித் அஃப்ரிடி (476 சிக்சர்கள்) ஆகிய இருவரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ரோகித் சர்மா சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருந்தார். அதே தொடரில் 19 சிக்ஸர்கள் அடித்து, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மையரின் (15 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்தார்.

மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் ரோகித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story