கிரிக்கெட்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு - கண்காட்சி போட்டி நடத்த திட்டம் + "||" + World's largest cricket stadium opens in March - Plan to hold exhibition competition

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு - கண்காட்சி போட்டி நடத்த திட்டம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு - கண்காட்சி போட்டி நடத்த திட்டம்
ஆமதாபாத்தில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
ஆமதாபாத்,

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தை விட பெரியதாகும். மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மைதானம் தயாராகி விடும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.


சர்தார் பட்டேல் பெயரிலான இந்த புதிய ஸ்டேடியத்தில் மார்ச் மாதம் ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையே கண்காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.