கிரிக்கெட்

இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது + "||" + MS Dhoni Sings Old Hindi Movie Song In Viral Video

இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது

இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டோனி, நிகழ்ச்சி ஒன்றில் இந்தி பாடலை பாடியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகி வருகிறது.
ராஞ்சி,

கடந்த உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும், டோனி பங்கேற்காமல் உள்ளார்.  எனினும் சமூக வலைத்தளங்களில்  எப்போதும் போல ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று லைக்குகளை அள்ளி வருகிறார். அவ்வப்போது, டோனி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் அதிக அளவில் வைரல் ஆகும். அண்மையில் கூட டோனி தனது மகள் ஸிவாவுடன் இணைந்து, ஜீப்  கழுவும்  வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 
இந்த நிலையில்,  ஹிந்தி பாடல் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பாடுகின்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் ஜாசி கில் என்பவர் டோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷிக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை டோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது
பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
2. ‘டோனியை போன்று சாதிக்க விரும்புகிறேன்’- கேரி
டோனியை போன்று சாதிக்க விரும்புவதாக அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்றுள்ளது.
4. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்ய வங்காள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா- மெஹ்மூத் குரேஷி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரத்து செய்யுமாறு வாங்காள தேச கிரிக்கெட் வாரியத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்.
5. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகியுள்ளார்.