கிரிக்கெட்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம் + "||" + Rahul, Kohli fall in quick succession

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
விசாகப்பட்டினம், 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடிய இரு வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 28-வது சதம்  இதுவாகும்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மறுமுனையில் அபாரமாக ஆடி வந்த  கே.எல்.ராகுலும் சதம் அடித்தார். ராகுல் அடித்த 3-வது சதம் இதுவாகும். 37-வது ஓவரில் இந்திய அணி 227 ரன்கள் சேர்த்து இருந்தபோது, இந்த ஜோடி பிரிந்தது. 102 ரன்கள் அடித்திருந்த நிலையில், கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
 
3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோலி ரன் எதுவும் இன்றி  ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு
தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு: ‘இலங்கைக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
‘போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளதற்கு நட்பு நாடுகளை திரட்டி அந்நாட்டிற்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
4. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்
காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்கும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது.
5. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு : டிரம்ப் மீண்டும் உறுதி
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு அளிக்கப்படும் என்று டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்.