ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்


ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அபாரம்
x
தினத்தந்தி 18 Dec 2019 3:10 PM GMT (Updated: 18 Dec 2019 3:10 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

விசாகப்பட்டினம், 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. இதனால், இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்யும் போது 32 ஓவரை வீசிய குல்தீப் யாதவ், அந்த ஓவரில்  ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் கைப்பற்றும் 2-வது ஹாட்ரிக் இதுவாகும். ஒருநாள் போட்டிகளில், மலிங்கா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Next Story