கிரிக்கெட்

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கும் இந்தியா + "||" + India most successful ODI team of the decade

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கும் இந்தியா

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கும் இந்தியா
கடந்த பத்து ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய அணி உள்ளது.
புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா தனது 157வது வெற்றியை பதிவு செய்து உள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 2019 டிசம்பர் 22 ஆம் தேதி (நேற்று) வரை இந்திய அணி விளையாடிய 249 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 157 வெற்றிகளையும், 79 தோல்விகளையும் அடைந்துள்ளது. (6 ஆட்டங்கள் ட்ரா, 7 ஆட்டங்களில் முடிவு தெரியவில்லை)

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேறு எந்த அணியையும் விட இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்று மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. இந்திய அணியின் வெற்றி/தோல்வி விகிதம் 1.987 ஆக உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 216 போட்டிகளில் விளையாடி, அதில் 125 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெற்றி/தோல்வி விகிதம் 1.582 ஆக உள்ளது.

இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் மொத்தம் 218 போட்டிகளில் விளையாடி, 123 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் வெற்றி/தோல்வி விகிதம் 1.500 ஆகும்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான ஒருநாள் தொடர்களையும் இந்திய அணியே (35 வெற்றிகள்) கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் (32 வெற்றிகள்), மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் (30 வெற்றிகள்) உள்ளது. 

28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி எந்த சர்வதேச கோப்பையையும் வெல்லவில்லை. இருப்பினும் ஒரு உலக கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் டிராபி, இரண்டு அரையிறுதி ஆட்டங்கள், ஒரு இறுதி ஆட்டம் என இந்திய அணி தொடர்ந்து நல்ல நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி அதிக வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. கடந்த 2000-2009  ஆண்டுகளில் முதல் ஐந்து இடத்தில் இருந்த அணிகள்;-

* ஆஸ்திரேலியா     -3.060 (202 வெற்றிகள், 282 ஆட்டங்கள்)
* தென் ஆப்ரிக்கா -1.825 (157 வெற்றிகள், 254 ஆட்டங்கள்)
* இலங்கை                -1.396 (155 வெற்றிகள், 276 ஆட்டங்கள்)
* பாகிஸ்தான்          -1.360 (151 வெற்றிகள், 267       ஆட்டங்கள்) 
* இந்தியா                  -1.238 (161 வெற்றிகள், 307 ஆட்டங்கள்)

1990-1999 வரை முதல் ஐந்து இடங்களில் இருந்த அணிகள்;-

*தென் ஆப்ரிக்கா   -1.803(110 வெற்றிகள், 177 ஆட்டங்கள்)
*ஆஸ்திரேலியா      -1.728(140 வெற்றிகள், 225 ஆட்டங்கள்)
*பாகிஸ்தான்           -1.390(146 வெற்றிகள், 261 ஆட்டங்கள்)
*வெஸ்ட் இண்டீஸ்-1.078(96 வெற்றிகள், 195 ஆட்டங்கள்)
*இந்தியா                   -1.016(122 வெற்றிகள், 257 ஆட்டங்கள்)

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி முதல் மூன்று இடங்களில் இடம் பெறவில்லை. 2000 முதல் 2009 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி விளையாடிய இறுதி ஆட்டங்களில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
2. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
3. ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி - இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்
ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்.
4. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
5. விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-மின்சார ரயில்கள் ரத்து
மும்பையில் இன்றும் நாளையும் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.