கிரிக்கெட்

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு + "||" + Indian team announces for T20, One Day International

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முறையே டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக முறையே டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் இந்தியா விளையாடுகிறது.

இதன்படி, இலங்கைக்கு எதிராக 3 சர்வதேச டி20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா விளையாடுகிறது. சர்வதேச டி20 முதல் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது. இதனை அடுத்து வருகிற ஜனவரி 14-ந் தேதி  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு பற்றி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த 5 பேர் கொண்ட குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் இலங்கை மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்தியா அணி

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சாமி.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் ; அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை
ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
2. இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவானது
இலங்கை -ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவானது. இதன்முலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3. இலங்கையில் சீதைக்கு கோவில்: மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கட்டுகிறது
இலங்கையில் மத்தியபிரதேச காங்கிரஸ் அரசால் சீதைக்கு கோவில் கட்டப்பட உள்ளது.
4. இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல்
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
5. இந்திய ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்ப்பு
இந்திய ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.