கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது + "||" + Pakistan wins the 2nd Test against Sri Lanka: The series was also captured

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 1-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.
கராச்சி,

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 191 ரன்களும், இலங்கை 271 ரன்களும் எடுத்தன.


80 பின்தங்கிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் மலைக்க வைக்கும் வகையில் விளையாடியது. டாப்-4 வீரர்களான ஷான் மசூத், அபித் அலி, கேப்டன் அசார் அலி, பாபர் அசாம் ஆகியோரது சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 212 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வெறும் 16 பந்துகளில் பறிகொடுத்தது. எம்புல்டெனியா (0), ஒஷாடா பெர்னாண்டோ (102 ரன்), விஷ்வா பெர்னாண்டோ (0) வரிசையாக வீழ்ந்தனர்.

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 62.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 12.5 ஓவர்களில் 4 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். நசீம் ஷாவின் வயது 16 ஆண்டு 307 நாட்கள். டெஸ்ட் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்த 2-வது இளம் பவுலர் என்ற பெருமையை பெற்றார். பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நசிம் உல்-கானி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் (1958-ம் ஆண்டு) தனது 16 வயது 303 நாட்களில் 5 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக தொடருகிறது. இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் அபித் அலி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். 


இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும். வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு 60 புள்ளிகள் கிடைத்தது. புள்ளி பட்டியலில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 216 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான், இலங்கை தலா 80 புள்ளிகளுடன் அடுத்த இடங்களிலும் உள்ளன.

பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறுகையில், ‘இங்கு வந்து விளையாடிய இலங்கைக்கு எங்களது இதயபூர்வமான நன்றிகள். அவர்கள் தான் எங்களுக்கு சொந்த மண்ணில் மீண்டும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் விளையாடும் வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். இந்த தொடர் எங்களுக்கு உணர்வுபூர்வமாக இருந்தது. நசீம் ஷாவிடம் தனித்துவமான திறமை இருக்கிறது. வரும் ஆண்டுகளில் எங்களது பந்து வீச்சை மேலும் வலுப்படுத்துவோம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் கொரோனா பாதித்தவர்கள் வருவதை தடுக்க தனுஷ்கோடி கடலில் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் இருந்து அகதிகள்,கடத்தல்காரர்கள் போர்வையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வருவதை கண்காணிக்க தனுஷ்கோடி கடலில் 3 கப்பல்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
2. கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் பாதியிலேயே தாயகம் திரும்பினர்.
5. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றிபெற்றது.