கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம் + "||" + School cricket: Chennai team progress to final

பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம்

பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம்
பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியது.
நெல்லை,

பள்ளி அணிகளுக்கான 6-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் சென்னை லேடி ஆண்டாள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வித்யா மந்திர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் லேடி ஆண்டாள் நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வித்யா மந்திர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்களே எடுக்க முடிந்தது. மற்றொரு அரைஇறுதியில் கோவை ராமகிருஷ்ணா பள்ளி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமியை தோற்கடித்தது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் லேடி ஆண்டாள்-ராமகிருஷ்ணா அணிகள் மோத உள்ளன.தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
2. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி நிதான ஆட்டம்: வசவதா சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது. அந்த அணி வீரர் அர்பித் வசவதா சதம் அடித்தார்.
3. அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி
அகில இந்திய கூடைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. பள்ளி கிரிக்கெட்: செயின்ட் ஜான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
பள்ளி கிரிக்கெட் போட்டியில் செயின்ட் ஜான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.