கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்ய வங்காள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா- மெஹ்மூத் குரேஷி + "||" + PAK Foreign Minister accuses India of putting pressure on Bangladesh to cancel their series against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்ய வங்காள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா- மெஹ்மூத் குரேஷி

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்ய வங்காள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா- மெஹ்மூத் குரேஷி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரத்து செய்யுமாறு வாங்காள தேச கிரிக்கெட் வாரியத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத்

வங்காள தேச கிரிக்கெட்  அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாட உள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

வங்காள தேச கிரிக்கெட் வாரிய தலைவரான நஸ்முல் ஹசன் சமீபத்தில் தங்கள் அணியின் உயர்மட்ட வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்க மறுத்துவிட்டதாகக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் சுற்றுப்பயணத்தின் நிச்சயமற்ற தன்மை குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறும் போது வங்காள தேசம்  தாங்களாகவே முடிவெடுக்குமாறு வலியுறுத்தியதுடன், இந்தியா தலையிட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

இலங்கை எங்கள் நாட்டுக்கு வந்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பாகிஸ்தாளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு  சரியான சூழல் இருப்பதாகவும், பாதுகாப்புடன் சிறந்த ஏற்பாடுகள்  செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளவில்லை.

வங்காள தேச வீரர்களை  வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள் சுற்றுப்பயணம் செய்யத் தயாராக இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இந்தியாவின் அழுத்தம் ஒரு தடையாக இருப்பதை நான் நிரூபிக்கிறேன்,

வங்காள தேசம் இந்த முடிவை சுயமாக  எடுக்க வேண்டும். ஆனால் சர்வதேச விளையாட்டுகளில், அவர்கள் இந்த வகையான அரசியலில் ஈடுபடக்கூடாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 6 பேர் பலி: 3 பேர் காயம்
பாகிஸ்தானில் பலூஸ்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
2. பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் சாவு
பாகிஸ்தானில் குவாரியில் பாறை சரிந்து 8 பேர் உயிரிழந்தனர்.
4. பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும்
பாகிஸ்தான் ஜூன் மாதம் வரை தொடர்ந்து சர்வதேசநிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும் அதன் பிறகு கருப்பு பட்டியலில் சேரக்கூடும்.
5. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் : இந்தியா தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.