நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 6 Jan 2020 9:26 AM GMT (Updated: 6 Jan 2020 9:26 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்றுள்ளது.

சிட்னி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பெர்த் மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முறையே 296 ரன்கள் மற்றும்  247 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ஆஸ்திரேலியா வென்றது.

தொடரை வென்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 454 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்து அணி 136 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 279 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் ஒயிட் வாஷ் செய்தது.

Next Story