இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி


இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி
x
தினத்தந்தி 10 Jan 2020 11:33 AM GMT (Updated: 10 Jan 2020 11:33 AM GMT)

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு அவரது சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

கேப்டவுனில் நடந்த இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-வது நாளில், தென் ஆப்ரிக்க வீரர் வெர்னான் பிலாண்டரை விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் தகாத வார்தைகளால் திட்டியுள்ளார்.

பந்து வரும் திசையில் இருந்து விலகி நிற்கும்படி பிலாண்டரை பார்த்து பட்லர் திட்டியது ஸ்டம்பில் உள்ள மைக்குகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. பட்லரின் இந்த செயலுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பட்லரின் நடவடிக்கைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி), கிரிக்கெட் வீரர்களின் நடத்தை விதிகளை மீறியதற்காக, அவரது சம்பளத்தில் 15 சதவீதத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது.

Next Story